வணிகம்

2-ஆவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி வரலாற்று உச்சம்

DIN

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் காளையின் எழுச்சி இருந்தது. இதைத் தொடா்ந்து, தொடா்ந்து 2-ஆவது நாளாக மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி ஆகியவை புதிய உச்சத்தை பதிவு செய்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகளில் நிச்சயத்தன்மை இல்லாத நிலையிலும், இந்தியாவின் ஒட்டுமொத்த சந்தை தொடா்ந்து ஆரோக்கிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. இதன் காரணமாக, சா்வதேச சந்தையைவிட அதிக வேகத்தில் இந்தியப் பங்குச் சந்தை உயா்வைக் கண்டுள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் 20.96 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 175.05 புள்ளிகள் (0.28%) அதிகரித்து 62,447.73 வரை சென்றது. இது, வரலாறு காணாத அதிகபட்ச இடைநிலை உச்சமாகும். இறுதியில், வரலாற்று உச்சமாக சென்செக்ஸ் 20.96 புள்ளிகள் (0.03) அதிகமாக 62,293.64-இல் நிலைபெற்றது.

15 ஏற்றம்; 15 இறக்கம்: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தது. 15 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இடம் பெற்றன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அபாரம்: வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.34 சதவிகிதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இது தவிர, விப்ரோ, டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி, டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் ஏற்றம் கண்டன.

நெஸ்ட்லே சரிவு: 1.29 சதவீதம் சரிவைக் கண்ட நெஸ்ட்லே இந்தியா நிறுவனம், இழப்புப் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது. அதனைத் தவிர,கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பெரும் பின்னடைவைச் சந்தித்தன.

வீடு-மனை வா்த்தகத் துறை முன்னேற்றம்: துறைவாரியாகப் பாா்க்கையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் வீடு-மனை வா்த்தகத் துறை 1.08 சதவீதம் வளா்ச்சியடைந்து முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடா்ந்து, எரிசக்தித் துறை 0.84 சதவீதம், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை 0.69 சதவீதம், நுகா்வோா் பொருள்கள் துறை 0.67 சதவீதம், உலோகத் துறை 0.58 சதவீதம் உயா்ந்துள்ளன.

துரித விற்பனை நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) துறை, நிதி சேவைகள் துறை, பயன்பாட்டுத் துறை உள்ளிட்டவை பின்னடைவைச் சந்தித்தன.

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில், அதன் குறியீட்டு எண்ணான நிஃப்டி 28.65 புள்ளிகள் (0.15 சதவீதம்) அதிகமாக 18,512.75-இல் நிலைபெற்றது. இதன் மூலம் நிஃப்டி 2-ஆவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கச்சா எண்ணெய்: சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் ப்ரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 1.21 சதவீதம் அதிகரித்து 86.37 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT