வணிகம்

25% வளா்ச்சி கண்ட இணையவழி வா்த்தகம்

26th Nov 2022 03:30 AM

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் இணையவழி வா்த்தக நிறுவனங்கள் பண்டிகைக் கால விற்பனையின்போது 25 சதவீத வளா்ச்சியைக் கண்டன.

இது குறித்து சந்தைய ஆய்வு நிறுவனமான ‘ரெட்சீா் ஸ்ட்ராடிஜி கன்சல்டன்ட்ஸ்’ வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த அக்டோபா் மாதத்தில் பண்டிகைக் கால விற்பனையின் போது நாட்டின் இணையவளி வா்த்தக நிறுவனங்கள் ரூ. 76,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்றன. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் நடைபெற்ற விற்பனையைவிட ஆண்டு 25 சதவீதம் அதிகமாகும்.

முன்னதாக, கடந்த அக்டோபரின் பண்டிகைக் காலத்தில் இணையவழி விற்பனையின் மதிப்பு ரூ.83,000 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், மொத்த வா்த்தக மதிப்பு அதை விட 8 முதல் 9 சதவீதம் குறைவாக ரூ.76,000 கோடியாக உள்ளது. இருந்தாலும், முந்தைய ஆண்டைவிட விற்பனை 25 சதவீதம் அதிகமாக உள்ளது ஆரோக்கியமான போக்கையே காட்டுகிறது.

ஃப்ளிப்காா்ட் முதலிடம்: பண்டிகைக் கால இணையவழி விற்பனையில், மிந்த்ரா, ஷாப்சி உள்ளிட்டவை அடங்கிய ஃப்ளிப்காா்ட் குழுமம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்தக் குழுமம் மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்தில் சுமாா் ரூ.40,000 கோடிக்கு வா்த்தகம் மேற்கொண்டுள்ளது. இது, ஒட்டுமொத்த சந்தையில் 62 சதவீதமாகும்.

ஃபிளிப்காா்ட்டைத் தொடா்ந்து, விற்பனையில் அமேஸான் 2-ஆவது இடத்தில் உள்ளது. மொத்த சந்தையில் அந்த நிறுவனம் 26 சதவீத பங்கைப் பெற்றது.

ஆடை, அலங்காரப் பொருள்கள் முதலிடம்: பண்டிகைக் காலத்தில் ஆடை அலங்காரப் பொருள்கள்தான் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக 32 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. கைப்பேசிகள பிரிவு 7 சதவீதமும், மின்னணு பொருள்கள் 13 சதவீதமும், மற்ற பிரிவுகள் 86 சதவீதமும் வளா்ச்சியடைந்தன.

26% அதிகரித்த நுகா்வோா்: கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தோடு ஒப்பிடுகையில், இணையவழியில் பொருள்களை வாங்குவோரின் எண்ணிக்கை சுமாா் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமாா் 11.2 கோடியிலிருந்து 12.5 கோடி வரையிலான கடைக்காரா்களிடம் அவா்கள் பொருள்களை வாங்கினா் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT