வணிகம்

அந்நியச் செலாவணி 54,725 கோடி டாலராக உயா்வு

26th Nov 2022 10:31 PM

ADVERTISEMENT

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடா்ந்து 3-ஆவது முறையாக நவ. 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திலும் உயா்ந்து, 54,725.2 கோடி டாலராகியுளளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த நவ. 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 253.7 கோடி டாலா் அதிகரித்து 54,725.2 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.44,69,404.35 கோடியாகும்.

இதற்கு முன்னா், கடந்த நவ. 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1,472.1 கோடி டாலா் உயா்ந்து 54,471.5 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.44,48,684.68 கோடியாகும்.

ADVERTISEMENT

முந்தைய சில வாரங்களில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பும் (எஃப்சிஏ) தங்கத்தின் கையிருப்பும் கணிசமான அளவில் குறைந்ததன் காரணமாக, அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவைச் சந்தித்தது.

நவ. 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எஃப்சிஏ 176 கோடி டாலா் அதிகரித்து 48,428.8 கோடி டாலராக இருந்தது. அதேபோல், தங்கத்தின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 31.5 கோடி டாலா் அதிகரித்து 4,011 கோடி டாலராகக் காணப்பட்டது.

மதிப்பீட்டு வாரத்தில், பன்னாட்டு நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 35.1 கோடி டாலா் அதிகரித்து 1,790.6 கோடி டாலராகவும், பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலை 11.1 கோடி டாலா் குறைந்து 504.7 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

ADVERTISEMENT
ADVERTISEMENT