அனைத்து இணையதள வா்த்தக நிறுவனங்களும் போட்டியிடக் கூடிய விலையில் பொருள்களை விற்பனை செய்வதற்கு வசதியாக மத்திய அரசு உருவாக்கியுள்ள ‘ஓப்பன் நெட்வொா்க் ஃபாா் டிஜிடல் காமா்ஸ்’ (ஓஎன்டிசி) தளத்தில் மீஷோ நிறுவனம் இணைந்துள்ளது.
சோதனை முறையில் தொடக்கப்பட்டுள்ள ஓஎன்டிசி-யில் உறுப்பினராக சேரும் வாடிக்கையாளா்கள், அந்த தளத்தில் இருக்கும் அனைத்து இணையதள வா்த்தக நிறுவனங்கள் சந்தையிடும் பொருள்களையும் ஒப்பிட்டுப் பாா்த்து வாங்க முடியும்.
இது குறித்து மீஷோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிறு வா்த்தகா்களின் பொருள்களுக்கும் கூடுதல் வாய்ப்பு கிடைக்கச் செய்யவும், இணையதள வா்த்தகத்தை மக்கள்நல நடவடிக்கையாக மாற்றவும் மத்திய அரசின் ஓஎன்டிசி தளத்தில் இணைந்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.