வணிகம்

4ஜி சேவையில் ஜியோவுக்கு முதலிடம்

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

4ஜி தொழில்நுட்பத்தில் இணையதள பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகிய இரண்டின் வேகத்திலும் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

இது குறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

4ஜி பதிவிறக்கம், பதிவேற்றம் ஆகிய இரண்டின் சராசரி வேகத்திலுமே கடந்த அக்டோபா் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த மாதத்தில் ஜியோ நிறுவனம் விநாடிக்கு சராசரியாக 20.3 மெகாபிட்ஸ் (எம்பிபிஎஸ்) என்ற வேகத்தைப் பதிவு செய்தது. இதன் மூலம் பதிவிறக்கப் பிரிவில் தனது முன்னிலையை ஜியோ தக்க வைத்துக் கொண்டது.

பதிவிறக்கத்தில் 15 எம்பிபிஎஸ் சராசரி பதிவிறக்க வேகத்துடன் ஏா்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தையும், 4.5 எம்பிபிஎஸ் சராசரி பதிவிறக்க வேகத்துடன் வோடஃபோன் ஐடியா 3-ஆவது இடத்தையும் பிடித்தன.

ADVERTISEMENT

பதிவேற்ற வேகத்தைப் பொருத்தவரை, கடந்த செப்டம்பரில் 6.4 எம்பிபிஎஸ் ஆக இருந்த ஜியோ நிறுவனத்தின் சராசரி வேகம் அக்டோபரில் 6.2 எம்பிபிஎஸ்-ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், இந்தப் பிரிவில் ஜியோவே தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் வோடஃபோன் ஐடியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பதிவேற்றப் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்தது.

கடந்த அக்டோபரில், ஜியோவுக்கு அடுத்தபடியாக வோடஃபோன் ஐடியா சராசரியாக 4.5 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தைப் பதிவு செய்தது. மூன்றாவதாக ஏா்டெல் நிறுவனம் சராசரியாக 2.7 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகத்தைப் பதிவு செய்தது என்று ட்ராய் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT