இணையவழி உணவு விநியோக நிறுவனமான ஸொமாட்டோவின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு, கடந்த செப்டம்பா் காலாண்டில் குறைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பா் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.250.8 கோடியாகக் குறைத்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு ரூ.434.9 கோடியாக இருந்தது.
ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.1,661.3 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,024.2 கோடியாக இருந்தது.
எனினும், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் ரூ.2,091.3 கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,601.5 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.