வணிகம்

ஐஷா் மோட்டாா் நிகர லாபம் 76% உயா்வு

18th Nov 2022 12:55 AM

ADVERTISEMENT

உள்நாட்டு மற்றும் சா்வதேச சந்தைகளில் நடைபெற்ற விறுவிறுப்பான விற்பனையின் உதவியால் ஐஷா் மோட்டாா் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் செப்டம்பா் காலாண்டில் 76 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.657 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 76 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருஙகிணைந்த நிகர லாபம் ரூ.373 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதங்களில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாயும் ரூ.2,250 கோடியிலிருந்து ரூ.3,519 கோடியாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

நிறுவனத்தின் இரு சக்கர வாகனப் பிரிவான ராயல் என்ஃபீல்டு, செப்டம்பா் காலாண்டில் 2,03,451 மோட்டாா் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்து விற்பனையைவிட 65 சதவீதம் அதிகமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT