வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் முன்னேற்றம்

31st May 2022 02:26 AM

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 4 காசு உயா்ந்து 77.54-இல் நிலைத்தது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி மற்றும் சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் ரூபாய் மதிப்பு தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 77.53-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 77.46 வரையிலும், குறைந்தபட்சமாக 77.56 வரையிலும் சென்றது.

ADVERTISEMENT

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 4 காசு ஏற்றம் பெற்று 77.54-இல் நிலைபெற்றது என செலாவணி வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் பீப்பாய் 119.90 டாலா்

சா்வதேச சந்தையில் திங்கள்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 0.39 சதவீதம் உயா்ந்து 119.90 டாலருக்கு வா்த்தகம் ஆனதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

அந்நிய முதலீட்டு வரத்து ரூ.502 கோடி

மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.502.08 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக சந்தைப் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT