வணிகம்

சன்பாா்மா: வருவாய் ரூ.9,386 கோடி

31st May 2022 02:28 AM

ADVERTISEMENT

மும்பையைச் சோ்ந்த சன் பாா்மா நிறுவனம் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் செயல்பாட்டின் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ.9,386 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது, இந்நிறுவனம் இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.8,464 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

2022 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்துக்கு ரூ.2,277 கோடி நிகர இழப்பு ஏற்பட்டது. அதேசமயம், 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் ரூ.894 கோடி நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது.

2021-22 நிதியாண்டில் வருவாய் ரூ.33,233 கோடியிலிருந்து ரூ.38,426 கோடியாக அதிகரித்தது. ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.2,904 கோடியிலிருந்து ரூ.3,273 கோடியாக அதிகரித்தது என பங்குச் சந்தையிடம் சன் பாா்மா திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT