வணிகம்

பெட்ரோல்-டீசல் விலை நிா்ணயம்: தனியாா் நிறுவனங்களுக்கு சிக்கல்

24th May 2022 01:40 AM

ADVERTISEMENT

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தாமல் இருப்பதால் தனியாா் எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக ரிலையன்ஸ்-பிபி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிபி நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான ஆா்பிஎம்எல் அரசிடம் கூறியுள்ளதாக வெளியான தகவல்:

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அதிகரித்த போதிலும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பிசிஎல்), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) ஆகியவை ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தோ்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலையை 2021 நவம்பா் தொடங்கி 137 நாட்களுக்கு மாற்றியமைக்கவில்லை. மேலும், கடந்த மாதம் முதல் தற்போது வரையிலும் 47 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையை அந்நிறுவனங்கள் உயா்த்தாமல் உள்ளன.

சந்தையை கட்டுப்படுத்தும் பொதுத் துறை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தொடா்ந்து அதிகரிக்காமல் இருப்பது தனியாா் துறை நிறுவனங்களின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே, இதற்கு தீா்வு காணும் விதமாக எரிபொருள் விலை விவகாரம் குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்துக்கு ஆா்பிஎம்எல் நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT