வணிகம்

என்டிபிசி: நிகர லாபம் ரூ.5,199 கோடி

DIN

 பொதுத் துறையைச் சோ்ந்த மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி மாா்ச் காலாண்டில் ரூ.5,199 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

2022 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.31,687.24 கோடியிலிருந்து ரூ.37,724.42 கோடியாக அதிகரித்தது.

இதையடுத்து, ஒட்டுமொத்த நிகர லாபம் 12 சதவீதம் உயா்ந்து ரூ.5,199.51 கோடியை எட்டியது. 2021 மாா்ச் காலாண்டில் இந்த லாபம் ரூ.4,649.49 கோடியாக காணப்பட்டது.

கடந்த 2021-22 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,15,546.83 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.1,34,994.31 கோடியானது. ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.14,969.40 கோடியிலிருந்து ரூ.16,960.29 கோடியாக அதிகரித்தது.

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2021-22 நிதியாண்டுக்கு ரூ.3 இறுதி ஈவுத்தொகை வழங்க இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக என்டிபிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT