வணிகம்

18 லட்சம் இந்திய பயனர்களின் கணக்குகளை முடக்கியது வாட்ஸ் ஆப்

2nd May 2022 06:03 PM

ADVERTISEMENT

 

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 18.05 லட்சம் இந்திய பயனர்களின் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியுள்ளது.

பயனர்களிடம் இருந்து எழுந்த புகாரின் அடிப்படையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலான தரவுகளைப் பகிரும் கணக்குகளையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியுள்ளது.

மாதம்தோறும் பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்து வருகிறது.

ADVERTISEMENT

அந்தவகையில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 18.05 லட்சம் பயனர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14.26 லட்சம் இந்திய பயனர்களின் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT