வணிகம்

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி: இனி இப்படியும் பதிலளிக்கலாம் -புதிய வசதி அறிமுகம்

28th Mar 2022 09:55 PM

ADVERTISEMENT

 

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளுக்கு இனி படங்கள் அல்லது குரல் பதிவுகள் மூலம் பதிலளிக்கும் புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள செயலி உருவாக்க நிபுணர் அலிசன்ட்ரோ பலுஸி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளுக்கு வாய்ஸ் மூலம் பதிலளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒலிப்பெருக்கு குறியீடை அழுத்தி குரல் மூலமும், படங்களுக்கான குறியீடை அழுத்தி படங்கள் மூலமும் ஸ்டோரிகளுக்கு பதிலளிக்கலாம்.

ADVERTISEMENT

இதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் மேலும் ஒரு புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இனி இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களுக்கு பிடித்தமானவற்றின் செய்தி அல்லது படங்களை Favourites ஆப்ஷன் மூலமும், தாங்கள் பின்தொடரும் நபர்களின் செய்தி அல்லது படங்களை Following ஆப்ஷன் மூலமும் முதலில் காண இயலும்.

படிக்க | டயா்களில் பஞ்சா் பாதுகாப்பு தொழில்நுட்பம்: ஜேகே டயா் அறிமுகம்

படங்களைப் பதிவேற்றும் தளமான இன்ஸ்டாகிராம், தனது பயனர்களின் விருப்பத்திற்கேற்ப படங்களை அல்லது விடியோக்களை நியூஸ் ஃபீட்-இல் காட்ட உள்ளது. இதன் மூலம் பயனர்கள் தாங்கள் விரும்பாத படங்கள் தனிச்சையாகவே ஒதுக்க இயலும்.

இன்ஸ்டாமிராம் பயன்பாட்டின்போது பயனர்கள் சிறந்த அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இரு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்தொடரும் நபர்கள் அல்லது கிரியேட்டர்களின் பதிவுகளுக்கு கால வரையறையின்படி பயனர்களின் நியூஸ் ஃபீட்-ல் முன்னுரிமை அளிக்கப்படும். அதாவது எது முன்னதாக பதிவிடப்பட்டதோ, அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

தாங்கள் இன்ஸ்டாகிராமில் எதைப் பார்க்க வேண்டும் என்பதை இன்ஸ்டாகிராமின் இடதுபுறமுள்ள இரு விருப்பங்களை (Favourites and Following) தேர்வு செய்வதன் மூலம் பயனர்கள் பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT