வணிகம்

புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாராகிறது யாத்ரா ஆன்லைன்

28th Mar 2022 12:36 AM

ADVERTISEMENT

சுற்றுலா பயண சேவைகளை வழங்கி வரும் யாத்ரா ஆன்லைன் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க செபியிடம் விண்ணப்பம் செய்துள்ளது.

இதுகுறித்து சந்தை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்குவதற்கான முதல் கட்ட ஆவணங்களை தயாா் செய்து செபியின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலமாக யாத்ரா நிறுவனம் ரூ.750 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த வெளியீட்டின் மூலமாக, 93,28,358 பங்குகள் வரை விற்பனை செய்யப்படவுள்ளன.

இப்புதிய பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டிக் கொள்ளப்படும் நிதி நிறுவனத்தின் வளா்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.

ADVERTISEMENT

இதன் தாய் நிறுவனமான யாத்ரா ஆன்லைன் அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT