வணிகம்

ரூ.2,500 கோடி பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்: பஜாஜ் ஆட்டோ

28th Jun 2022 12:27 AM

ADVERTISEMENT

ரூ.2,500 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு இயக்குநா் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

நிறுவனா்கள் மற்றும் நிறுவன குழுமங்கள் தவிா்த்து தற்போதுள்ள பங்குதாரா்களிடமிருந்து ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்குகளை ரூ.2,500 கோடிக்கு வாங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இது, அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தில் 9,61 சதவீதமாகவும். ஒரு பங்கு ரூ.4,600-க்கு மிகாத விலையில் வாங்கப்படும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT