வணிகம்

'பிளின்கிட்'நிறுவனத்தை வாங்கிய 'சொமேட்டோ': டெலிவரியில் புதிய வேகம்!

27th Jun 2022 03:19 PM

ADVERTISEMENT

 

சொமேட்டோ நிறுவனம் பிளின்கிட் என்ற உணவு டெலிவரி நிறுவனத்தை ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தைகளில் உயர்ந்துள்ளன. 

பிளின்கிட் என்ற இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், காய்கறி மற்றும் உணவுகளை வீடுகளுக்குகொண்டு சென்று சேர்க்கும் பணியைச் செய்து வந்தது. 

இதனிடயே அந்த நிறுவனத்தில் பங்குகள் ஏலத்திற்கு வந்த நிலையில், அதனை சொமேட்டோ நிறுவனம் ரூ.4,447 கோடி மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. டெலிவரி செய்யும் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு சொமேட்டோ இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ADVERTISEMENT

படிக்க | கருக்கலைப்பு செய்யனுமா? ஊழியர்களுக்கு சலுகை அறிவித்தது கூகுள்

அதன் விளைவாக பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூன் 27) சொமேட்டொ நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

பிளிங்கிட் நிறுவனம் கடந்த மே மாதத்தில் மட்டும் 79 லட்சம் ஆர்டர்களை செய்துள்ளது. இது சொமேட்டோ நிறுவனத்தின் விகிதத்தில் 16 சதவிகிதமாகும். அதாவது சொமேட்டோ நிறுவனம் ஆயிரம் நகரங்களில் தங்களது சேவைகளை வழங்குகிறது எனில், பிளிங்கிட் நிறுவனம் 15 நகரங்களில் தனது சேவையை வழங்கி வருவதற்கு சமம்.

மேலும், பிளிங்கிட் நிறுவனம் ஒரு ஆர்டரின் மதிப்பு ரூ.509 வரை வசூலிக்கிறது. இது சொமேட்டோ நிறுவனத்தின் ஒரு ஆர்டர் மதிப்பை விட 28 சதவிகிதம் அதிகமாகும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT