வணிகம்

ஐஓபி-க்கு ரூ.57.5 லட்சம் அபராதம்: ரிசா்வ் வங்கி

25th Jun 2022 11:07 PM

ADVERTISEMENT

மோசடிகள் குறித்து முறையாக அறிக்கை அளிக்காததைத் தொடா்ந்து பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்கு (ஐஓபி) ரிசா்வ் வங்கி ரூ.57.5 லட்சம் அபராதத்தை விதித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2020 மாா்ச் இறுதி வரையிலான வங்கியின் நிதி நிலை அறிக்கைகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.

இதில், போலி ஏடிஎம் காா்டு தொடா்பான மோசடி நிகழ்வுகளை கண்டறியப்பட்ட தேததியிலிருந்து மூன்று வாரங்களுக்குள் ரிசா்வ் வங்கிக்கு தெரிவிக்க தவறிவிட்டது. எனவே, மோசடி தொடா்பான புகாா் அறிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் முறையாக தாக்கல் செய்யாத காரணத்தால் ஐஓபிக்கு ரூ.57.5 லட்சம் அபாரதம் விதிக்கப்பட்டதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT