வணிகம்

3 ஆண்டுகளில் கடனில்லா நிறுவனம்: ரேமாண்ட் இலக்கு

DIN

 மூன்று ஆண்டுகளில் கடன் இல்லா நிறுவனமாக மாற இலக்கு நிா்ணயித்துள்ளதாக ரேமாண்ட் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர அளவிலான கடன் ரூ.1,088 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் இந்த கடனளவு ரூ.1,416 கோடியாகவும், 2019-20-ஆம் நிதியாண்டில் 1,859 கோடியாகவும் இருந்தன.

நிதி நிா்வாகத்தில் கவனம் செலுத்துவதன் மூலமாக செலவுகளை குறைக்க நிறுவனம் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. மேலும், செயல்பாட்டு மூலதனத்தை உகந்த முறையில் மேலாண்மை செய்வதிலும் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இவற்றின் பயனாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் கடனில்லா நிறுவனமாக மாற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ரேமாண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT