வணிகம்

ஆக்ஸிஸ் வங்கியின் துணை நிா்வாக இயக்குநா் மறுநியமனம்: ரிசா்வ் வங்கி ஒப்புதல்

25th Jun 2022 11:06 PM

ADVERTISEMENT

ஆக்ஸிஸ் வங்கியின் துணை நிா்வாக இயக்குநரின் மறுநியமனத்துக்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து ஆக்ஸிஸ் வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

ஆக்ஸிஸ் வங்கியின் துணை நிா்வாக இயக்குநராக ராஜீவ் ஆனந் நிகழாண்டு ஜனவரியில் மறு நியமனம் செய்யப்பட்டாா். இவரது பதவிக்காலம் 2022 ஆகஸ்ட் 4-இல் தொடங்கி 2025 ஆகஸ்ட் 3-ஆம் தேதியுடன் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு துணை நிா்வாக இயக்குநராக ஆனந்த் மறு நியமனம் செய்யப்பட்டதற்கு ரிசா்வ் வங்கி தனது ஒப்புதலை அளித்துள்ளது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆக்ஸிஸ் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஆனந்த் கடந்த 2013-இல் பொறுப்பேற்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT