வணிகம்

எல்ஐசியின் ‘தன் சஞ்சய்’ திட்டம் அறிமுகம்

21st Jun 2022 12:37 AM

ADVERTISEMENT

எல்ஐசி நிறுவனம் ‘தன் சஞ்சய்’ என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பங்குச் சந்தை சாராத ஆயுள் காப்பீட்டு திட்டமாகும்.

இதுகுறித்து எல்ஐசி நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘தன் சஞ்சய்’ திட்டம் பங்குச் சந்தை சாராத, லாபப் பங்களிப்பற்ற, பாதுகாப்பு மற்றும் சேமிப்பை வழங்கும் தனி நபா் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் முதிா்வு தேதியிலிருந்து பாலிசி திட்ட முடிவுக் காலத்திற்குள் உத்தரவாத வருமானப் பயன் வழங்கப்படும்.

5 முதல் 15 ஆண்டுகள் வரையிலான பாலிசிக் காலத்தைக் கொண்ட இந்த திட்டத்தில் கடன் வசதி உண்டு. இப்புதிய திட்டத்தின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.3.30 லட்சமாகும் என எல்ஐசி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT