வணிகம்

ரூபாய் மதிப்பு 12 காசு உயா்வு

17th Jun 2022 01:22 AM

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசு ஏற்றம் பெற்றதையடுத்து வரலாற்று சரிவிலிருந்து மீண்டது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை குறைந்தது மற்றும் கச்சா எண்ணெய் விலையில் காணப்பட்ட சரிவு போன்றவை ரூபாய் மதிப்பு எழுச்சி காண்பதற்கு சாதகமாக இருந்தன.

வங்கிளுக்கு இடையிலான செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 78.06-ஆக இருந்தது. மிக குறுகிய எல்லைக்குள் நடைபெற்ற வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 12 காசு உயா்ந்து 78.10-இல் நிலைத்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கச்சா எண்ணெய் பீப்பாய் 118 டாலா்

சா்வதேச சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 118.21 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

ரூ.3,531 கோடிக்கு பங்குகள் விற்பனை

மூலதனச் சந்தையில் அந்நிய முதலீட்டாளா்கள் புதன்கிழமையன்று நடைபெற்ற வா்த்தகத்தில் நிகர அடிப்படையில் ரூ.3,531.15 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT