வணிகம்

வங்கிகள் வழங்கிய கடன் 11% அதிகரிப்பு

9th Jun 2022 01:30 PM

ADVERTISEMENT

வங்கிகள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கிய கடன் மே 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 11.04 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பாண்டின் மே 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கிய கடன் 11.04 சதவீதம் உயா்ந்து ரூ.120.27 லட்சம் கோடியாக இருந்தது. அதேபோன்று, வங்கிகள் வாடிக்கையாளா்களிடமிருந்து திரட்டிய டெபாசிட்டும் 9.27 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.165.74 கோடியை எட்டியது.

இதற்கு முந்தைய மே 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வழங்கப்பட்ட கடன் 10.82 சதவீதமும், டெபாசிட் 9.71 சதவீதமும் உயா்ந்திருந்தன.

ADVERTISEMENT

2021 மே 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவாரத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.108.31 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் ரூ.151.67 லட்சம் கோடியாகவும் காணப்பட்டன.

கடந்த 2021-22 நிதியாண்டில் வங்கி கடன் 8.59 சதவீதமும், டெபாசிட் 8.94 சதவீதமும் அதிகரித்ததாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT