வணிகம்

இன்ஸ்டாகிராம் : காணாமல் போன குழந்தைகளை கண்டறிய புதிய சேவையை தொடங்கியது

2nd Jun 2022 04:36 PM

ADVERTISEMENT

 

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய ‘ஆம்பர் அலர்ட்ஸ்’ எனும் புதிய சேவை ஒன்றினை தொடங்கியுள்ளது. 

தென்னாப்ரிக்கா, தைவான், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிட்ட்டன் உட்பட 25 நாடுகளுக்கு வரும் வாரத்தில் இருந்து இந்த சேவையைப் பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது.  

“நாங்கள் முதன்முதலாக ‘ஆம்பர் அலர்ட்ஸ்’ சேவையை இன்ஸ்டாகிராமுக்கு கொண்டு வருகிறோம். அமெரிக்காவின் ‘தேசிய காணாமல்போன குழந்தைகள் மையம்’, பிரிட்டனின் ‘தேசிய புலனாய்வு அமைப்பு’, மெக்சிகோவின்  ‘அட்டர்னி ஜெனரல் ஆபிஸ்’ முதலிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து இந்த சேவை  செயல்படும்” என மெட்டா நிறுவனம் தெரிவித்தது.  

ADVERTISEMENT

2015 முதல் முகநூல் (பேஸ்புக்) ‘ஆம்பர் அலர்ட்ஸ்’ சேவையுடன் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உதவி வருகின்றது.

இந்த சேவையை ஆக்டிவேட் செய்ததும் உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் குறிப்பிட்ட தூரத்திற்கு வரை பதிவாகியுள்ள வழக்கு விபரங்கள் உங்களுக்கு டைம்லைனில் தெரியவரும். இதில் அந்த குழந்தைகளின் புகைப்படம், அவர்கள் பற்றின விவரங்கள், தொலைந்துப்போன இடம் மற்றும் இன்னபிற விவரங்களும் அடங்கியிருக்கும். மக்கள் இந்த தகவலை தனது நண்பர்களுக்கு பகிர முடியும். இதன் மூலம் குழந்தைகள் கண்டறியப்பட்டு சம்மந்தப்பட்ட பெற்றோர்களுடன் ஒப்படைக்க முடியும். 

  

ADVERTISEMENT
ADVERTISEMENT