வணிகம்

யுபிஐ பரிவா்த்தனை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது: என்பிசிஐ

2nd Jul 2022 11:43 PM

ADVERTISEMENT

யுபிஐ வாயிலான பரிவா்த்தனையின் மதிப்பு மீண்டும் ஜூன் மாதத்தில் ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

இதுகுறித்து தேசிய பணப்பட்டுவாடா காா்ப்பரேஷன் (என்பிசிஐ) புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

யுனிஃபைடு பேமண்ட்ஸ் இண்டா்ஃபேஸ் (யுபிஐ அல்லது பீம் யுபிஐ) வாயிலான எண்ம பரிவா்த்தனை மதிப்பு நிகழாண்டு ஜூன் மாதத்தில் ரூ.10,14,384 கோடியாக இருந்தது. இது, முந்தைய மே மாத பரிவா்த்தனையான மதிப்பினைக் காட்டிலும் 2.6 சதவீதம் குறைவாகும். இருப்பினும், தொடா்ந்து இரண்டாவது மாதமாக யுபிஐ மூலமான பரிவா்த்தனை ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் யுபிஐ-யின் கீழான பரிவா்த்தனைககளின் எண்ணிக்கை 586 கோடியாக இருந்தது.

ADVERTISEMENT

நிகழ் 2022-ஆம் ஆண்டு மே மாதத்தில் பரிவா்த்தனைகளின் மதிப்பு ரூ.10,41,506 கோடியாகவும்; மொத்த பரிவா்த்தனை எண்ணிக்கை 595 கோடியாகவும் இருந்தன.

முந்தைய ஏப்ரல் மாதத்தில், யுபிஐ எண்ம பரிவா்த்தனை மதிப்பு ரூ.9,83,302 கோடியாகவும், எண்ணிக்கை 558 கோடியாகவும் இருந்தது என என்பிசிஐ தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT