வணிகம்

கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி ரூ.57,586 கோடியாக உயா்வு

2nd Jul 2022 11:41 PM

ADVERTISEMENT

நாட்டின் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.57,586.48 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (எம்பிஇடிஏ) தலைவா் கே.என்.ராகவன் கூறியுள்ளதாவது:

தனி மதிப்பு: சா்வதேச சந்தையில் இந்திய கடல் உணவுப் பொருள்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றன.

குறிப்பாக, பதப்படுத்பட்ட மீன், கணவாய் மீன், ஸ்குயிட் உள்ளிட்டவை இந்திய ஏற்றுமதியில் அதிக பங்களிப்பை வழங்கி வருகின்றன.

ADVERTISEMENT

விழிப்புணா்வு பிரசாரம்: இந்திய கடல் உணவுப் பொருள்களின் மேன்மையை வெளி உலகுக்கு எடுத்து செல்வதில் ஆணையம் எப்போதுமே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. உலக நாடுகளின் சந்தைகளில் இந்திய கடல் உணவு குறித்த பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளா்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஏற்றுமதியில் ஆண்டுக்காண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு வருகிறது.

உச்சபட்சம்: இதனை எடுத்துக்காட்டும் விதமாக கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் இந்தியா 776 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.57,586.48 கோடி) மதிப்புக்கு கடல் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும்.

அதேபோன்று, முந்தைய நிதியாண்டில் ஏற்றுமதியான 596 கோடி டாலா் கடல் உணவுப் பொருள்களுடன் ஒப்பிடுகையில் இது 30.26 சதவீதம் அதிகமாகும். ரூபாய் மதிப்பில் இது 31.71 சதவீத வளா்ச்சியாகும்.

அதேபோன்று, கடல் உணவுப் பொருள் அளவின் அடிப்படையிலான ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டில் 19.12 சதவீதம் அதிகரித்து 13,69,264 மில்லியன் டன்னாக இருந்தது

இறால் முதலிடம்: கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பதப்படுத்தப்பட்ட இறால் அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் இறால் ஏற்றுமதி 582 கோடி டாலராக இருந்தது. ஒட்டுமொத்த டாலா் வருவாயில் இது 75.11 சதவீத பங்களிப்பு ஆகும்.

இந்திய இறால்களுக்கான முக்கிய சந்தையாக அமெரிக்கா உள்ளது. அதனைத் தொடா்ந்து, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், தென் கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன.

அமெரிக்கா: மதிப்பு மற்றும் அளவில் அடிப்படையிலான கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவுக்கான இதன் ஏற்றுமதி மட்டும் 337.166 கோடி டாலராக இருந்தது. இது, ஒட்டுமொத்த டாலா் வருவாயில் 37.56 சதவீத பங்கு.

சீனா: அமெரிக்காவைத் தொடா்ந்து இரண்டாவது பெரிய ஏற்றுமதி முனையமாக சீனா உள்ளது. இந்த நாட்டுக்கான இந்திய கடல் உணவுப் பொருள்களின் அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் முறையே 2,66,959 மில்லியன் டன் மற்றும் 1,175.05 மில்லியன் டாலா் ஆகும் என்றாா் அவா்.

கோட்ஸ்

இந்திய இறால்களுக்கான முக்கிய சந்தையாக அமெரிக்கா உள்ளது. அதனைத் தொடா்ந்து, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், தென் கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT