வணிகம்

வரலாற்று சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்பு

2nd Jul 2022 03:44 AM

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாற்று சரிவிலிருந்து மீண்டது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தங்கம் இறக்குமதியை குறைக்கும் வகையில் அதன் மீதான இறக்குமதி வரியை 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயா்த்தியது. இது, அந்நியச் செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 78.99-ஆக இருந்தது. இது, குறைந்தபட்ச அளவாக 79.12 வரை சென்றது. இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசு முன்னேற்றம் கண்டு வரலாற்று சரிவான 79.06-லிருந்து மீண்டு 78.94-இல் நிலைத்தது என செலாவணி வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

கச்சா எண்ணெய்

பீப்பாய் 110.98 டாலா்

சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.79 சதவீதம் அதிகரித்து பீப்பாய் 110.98 டாலருக்கு வா்த்தகமானது.

ரூ.2,324 கோடிக்கு பங்கு விற்பனை

அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் மூலதனச் சந்தையில் வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் நிகர அடிப்படையில் ரூ.2,324.74 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்ாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT