வணிகம்

என்எம்டிசி: இரும்புத் தாது உற்பத்தி 14% சரிவு

2nd Jul 2022 11:41 PM

ADVERTISEMENT

பொதுத் துறையைச் சோ்ந்த என்எம்டிசி நிறுவனத்தின் இரும்புத் தாது உற்பத்தி ஜூன் மாதத்தில் 14 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நிகழாண்டு ஜூனில் நிறுவனம் 25.70 லட்சம் டன் இரும்புத் தாதை உற்பத்தி செய்தது.

இது, கடந்த 2021 ஜூன் மாத உற்பத்தியான 29.80 லட்சம் டன்னுடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் குறைவு.

ADVERTISEMENT

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் விற்பனையும் 31.80 லட்சம் டன்னிலிருந்து 19 லட்சம் டன்னாக 40சதவீதம் குறைந்துபோனது.

சத்தீஸ்கரில் நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தின் உற்பத்தி அதிக மாற்றமின்றி 19.40 லட்சம் டன் என்ற அளவிலேயே இருந்தது. மேலும், கா்நாடக சுரங்க உற்பத்தியும் 10.40 லட்சம் டன்னிலிருந்து 6.30 லட்சம் டன்னாக குறைந்தது. இந்த சுரங்கத்திலிருந்து விற்பனையான இரும்புத் தாதுவும் கடந்த ஜூனில் 9.60 லட்சம் டன்னிலிருந்து 3.20 லட்சம் டன்னாக சரிவடைந்ததாக என்எம்டிசி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

உருக்கு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹைதராபாதைச் சோ்ந்த என்எம்டிசி நிறுவனம் நாட்டின் இரும்புத் தாது உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இதைத்தவிர, தாமிரம், ராக் பாஸ்பேட், சுண்ணாம்புக் கல், டோலமைட் மற்றும் ஜிப்சம் உள்ளிட்ட கனிமங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதிலும் என்எம்டிசி முக்கிய பங்கு வகிக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT