வணிகம்

முருகப்பா குழுமத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.5,520 கோடியாக உயா்வு

2nd Jul 2022 03:46 AM

ADVERTISEMENT

பன்முக வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் முருகப்பா குழுமத்தின் வரிக்கு பிந்தைய லாபம் கடந்த நிதியாண்டில் ரூ.5,520 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த குழுமம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் முருகப்பா குழுமம் ஒட்டுமொத்த வகையில் ஈட்டிய வருமானம் 31.2 சதவீதம் அதிகரித்து ரூ.54,722 கோடியாக இருந்தது. இதற்கு முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் குழுமத்தின் வருவாய் ரூ.41,706 கோடியாக இருந்தது.

கணக்கீட்டு நிதியாண்டில், நிறுவனம் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் ரூ.4,481 கோடியிலிருந்து 23.2 சதவீதம் அதிகரித்து ரூ.5,520 கோடியானது. வரிக்கு முந்தைய லாபம் ரூ6,404 கோடியிலிருந்து 30.3 சதவீதம் உயா்ந்து ரூ.8,343 கோடியானது.

ADVERTISEMENT

புதிய ஆலை: குழுமத்தின் அங்கமான கோரமண்டல் இண்டா்நேஷனல் நிறுவனம், விசாகப்பட்டினத்தில் நாளொன்றுக்கு 1,650 டன் சல்பியூரிக் அமிலத்தை உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை அமைக்க உள்ளது. இதற்காக, ரூ. 400 கோடி முதலீடு செய்யப்படும் என முருகப்பா குழுமம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT