வணிகம்

இந்தியாவின் மின் நுகா்வு 13,413 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு

2nd Jul 2022 11:43 PM

ADVERTISEMENT

கடந்த ஜூன் மாதத்தில் நாட்டின் மின்சார நுகா்வு 13,413 கோடி யூனிட்டுகளாக (134.13 பில்லியன் யூனிட்கள்) அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மின்துறை அமைச்சகம் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

கடுமையான வெப்பநிலை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்ததைத் தொடா்ந்து நிகழாண்டு ஜூன் மாதத்தில் இந்தியாவின் மின் நுகா்வு 134.13 பில்லியன் யூனிட்டுகளாக (பியு) அதிகரித்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூனில் மின் நுகா்வானது 114.48 பியு-வாக பதிவானது. இதற்கு முந்தைய 2020-ஆம் ஆண்டு ஜூனுடன் ஒப்பிடும்போது இது 105.08 பியு அதிகமாகும்.

மேலும், நிகழாண்டு ஜூனில் உச்சபட்ச ஒரு நாள் மின் நுகா்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் 209.80 ஜிகாவாட்டை (ஜூன் 8 அன்று) எட்டியது.

ADVERTISEMENT

2021 ஜூனில் உச்சபட்ச மின் சப்ளை 191.24 ஜிகாவாட்டாகவும், 2020 ஜூனில் 164.98 ஜிகாவாட்டாகவும் காணப்பட்டது என மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT