வணிகம்

ரூ.7.99 லட்சத்தில் மாருதி சுஸுகியின் புதிய ப்ரெஸ்ஸா

1st Jul 2022 01:45 AM

ADVERTISEMENT

மாருதி சுஸுகி நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ப்ரெஸ்ஸா காரின் புதிய பதிப்பை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியாவின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஹிசாஷி டேக்யூச்சி கூறியதாவது:

ப்ரெஸ்ஸாவின் புதிய பதிப்பு கடந்த எட்டு மாதங்களில் நிறுவனம் அறிமுகப்படுத்தும் 6-ஆவது தயாரிப்பாகும். இது, இந்திய சந்தையில் எங்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. எஸ்யுவி பிரிவில் இந்த தயாரிப்பு இதர நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும். வடிவமைப்பு, தொழில்நுட்பம், முக்கிய அம்சங்கள் அனைத்தும் இப்புதிய ப்ரெஸ்ஸா காரில் அடங்கியுள்ளது.

நெக்ஸ்ட்-ஜென் கே -சீரிஸ் 1.5 லிட்டா் பெட்ரோல் என்ஜின் ஸ்மாா்ட் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இப்புதிய ப்ரெஸ்ஸாவில் இடம்பெற்றுள்ளது. லிட்டருக்கு 20.15 கி.மீ. வரை மைலேஜ் கிடைக்கும். ஆறு ஏா்பேக் உள்பட 20 பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மாடல்களுக்கு ஏற்ப இதன் விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.13.96 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT