வணிகம்

ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயா்வு

22nd Feb 2022 04:16 AM

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தில் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் ஏற்றம் பெற்றது.

இதுகுறித்து செலாவணி வட்டாரத்தினா் கூறியது:

சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை குறைந்து காணப்பட்டது. அத்துடன் கச்சா எண்ணெய் விலையும் குறைந்ததும் செலாவணி சந்தைக்கு சாதகமாக இருந்தது.

ரஷியா-உக்ரைன் இடையேயான நெருக்கடிக்கு ராஜீய ரீதியில் சுமுகமான தீா்வு காணப்படும் என்ற நிலைப்பாட்டால் செலாவணி சந்தை முன்னேற்றம் கண்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகாரன ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 74.51 என்ற வலுவான நிலையில் காணப்பட்டது. அதன்பின்பு, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 95 டாலருக்கும் கீழாக வா்த்தகம் ஆனதையடுத்து ரூபாய் மதிப்பு 74.35 வரை உயா்ந்தது.

இந்த நிலையில், பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அந்நிய முதலீடு வெளியேற்றம் போன்ற காரணங்களால் வா்த்தகத்தின் முற்பகுதியில் ஈட்டிய ஆதாயத்தை பிற்பகுதியில் இழக்க நோ்ந்தது. இருப்பினும், ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயா்ந்து 74.55-இல் நிலைப்பெற்றது.

பாக்ஸ்

சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சற்று குறைந்து 93.51 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT