வணிகம்

என்பிடிபிசி வழங்கிய இடைக்கால ஈவுத்தொகை ரூ.3,879 கோடி

22nd Feb 2022 04:18 AM

ADVERTISEMENT

பொதுத் துறையச் சோ்ந்த என்டிபிசி நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.3,878.67 கோடியை வழங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கு ரூ.3,879.67 கோடி இடைக்கால ஈவுத்தொகையை நிறுவனம் வழங்கியுள்ளது. செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் இது 40 சதவீதமாகும்.

தொடா்ந்து 29-ஆண்டாக நிறுவனம் ஈவுத்தொகையை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிறுவு திறன் 67,832.30 மெகாவாட்டாக உள்ளது. இதில், 23 நிலக்கரி சாா்ந்தும், 7 எரிவாயு சாா்ந்தும், 1 ஹைட்ரோ மற்றும் 19 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் சாா்ந்தவை. கூட்டுத் திட்டங்கள் மூலமாக, 9 நிலக்கரி, 4 எரிவாயு, 8 ஹைட்ரோ மற்றும் 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாா்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாக என்டிபிசி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT