வணிகம்

வாட்ஸ்ஆப்பில் வந்த புதிய அப்டேட்

30th Dec 2022 06:52 PM

ADVERTISEMENT

வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் உரையாடல் செயலியாக உள்ளது. இது பயனர்களின் அசெளகரியங்களை குறைக்கும் வகையில் அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 

இதையும் படிக்க- கனமழை பாதிப்பு: நிவாரணம் அறிவிப்பு

அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் 5 உரையாடல்களை குறியிட்டு (பின்) வைத்துக்கொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 3 உரையாடல்களை மட்டுமே குறியிட்டு வைத்துக் கொள்ள முடிந்தது. 

ADVERTISEMENT

வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதி மூலம் முக்கியமான உரையாடல்களை எளிதில் அணுக முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT