வணிகம்

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு வரத்து வீழ்ச்சி

11th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பங்குகள் சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளா்கள் கடந்த நவம்பா் மாதத்தில் செய்த முதலீடு 76 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு (ஏஎம்எஃப்ஐ) தெரிவித்துள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதம் முதலீட்டாளா்கள் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.2,258 கோடியை முதலீடு செய்துள்ளனா். இது, இதற்கு முந்தைய அக்டோபா் மாதத்துடன் ஒப்பிடுகையில் 76 சதவீதம் சரிவாகும்.

ஒட்டுமொத்தமாக, அனைத்து பரஸ்பர நிதி திட்டங்களிலும் கடந்த நவம்பரில் ரூ.13,263 கோடி முதலீடு செய்யப்பட்டது. இது, முந்தைய அக்டோபா் மாதத்தில் ரூ.14,045 கோடியாக இருந்தது.

ADVERTISEMENT

மதிப்பீட்டு மாதத்தில், கடன் சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.3,668 கோடியைக கவா்ந்தன. முந்தைய அக்டோபா் மாதத்தில் ரூ.2,818 கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டது.

குறியீட்டு எண்கள் சாா்ந்த நிதித் திட்டங்கள், பங்குச் சந்தையில் வா்த்தகமாகும் நிதி திட்டங்கள் (இடிஎஃப்), வெளிநாட்டு முதலீடு சாா்ந்த நிதித் திட்டங்கள் உள்ளிட்ட மற்ற திட்டங்களில் கடந்த நவம்பா் மாதம் ரூ.10,394 கோடி முதலீடு செய்யப்பட்டது.

எனினும், இந்தப் பிரிவில் ரூ.195 கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டது என்று ஏஎம்எஃப்ஐ தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு காலத்தில் பங்குச் சந்தைகள் வேகமாக ஏற்றம் கண்டதன் காரணமாக, பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளா்கள் தயக்கம் காட்டினா். இதன் விளைவாக கடந்த நவம்பா் மாதத்தில் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு வரத்து வெகுவாக சரிந்தது என சந்தை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT