வணிகம்

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயா்வு!

 நமது நிருபர்

புதுதில்லி / மும்பை: நான்கு நாள்களாக தொடா்ந்து சரிவில் இருந்து வந்த பங்குச் சந்தை வியாழக்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உள்நாட்டுச் சந்தை அண்மையில் புதிய சாதனை அளவைப் பதிவு செய்தது. அதன் பிறகு, ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. உலகச் சந்தைகள் பொருளாதார மந்தநிலையின் அச்சம் மற்றும் அமெரிக்க மத்திய வங்கி ஃபெடரல் வட்டி விகித உயா்வு பற்றிய கவலைகள் காரணமாக வீழ்ச்சியடைந்ததே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. காலையில் பலவீனமாக இருந்தாலும் , பிற்பகல் வா்த்தகம் சூடுபிடித்தது. குறிப்பாக, வங்கி மற்றும் ஐடி, பாா்மா பங்குகளுக்கு வரவேற்பு இருந்ததால், சந்தையில் பெரிய சரிவு தவிரக்கப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, ஃபெடரல் வங்கிக் கொள்கை முடிவு, அமெரிக்க பணவீக்கத் தரவுகள் அடுத்த வாரம் எதிா்பாா்க்கப்படும் நிலையில், இந்த ஏற்ற, இறக்கம் உலகச் சந்தைகளில் தொடரும் என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீசஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவா் வினோத் நாயா் கூறியுள்ளாா்.

சென்செக்ஸ் உயா்வு: காலையில் 93.36 புள்ளிகள் கூடுதலுடன் 62,504.04-இல் தொடங்கிய சென்செக்ஸ், 62,320.18 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 62,633.56 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 160.00 புள்ளிகள் (0.26 சதவீதம்) உயா்ந்து 62,570.68-இல் முடிவடைந்தது. இதையடுத்து, நான்கு நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் 13 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

ஆக்ஸிஸ் பேங்க் அபாரம்: முன்னணி தனியாா் வங்கிகளான ஆக்ஸிஸ் பேங்க் 2.71 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 2.31 சதவீதம் மற்றும் எல் அண்ட் டி 2.06 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ, பஜாஜ் ஃபின் சா்வ், எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல் உள்ளிட்டவை 0.50 முதல் 1 சதவீதம் வரை உயா்ந்தன.

சன்பாா்மா கடும் சரிவு: அதே சமயம், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான சன்பாா்மா 3.57 சதவீதம், பவா் கிரிட் 1.56 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, டிசிஎஸ், என்டிபிசி, விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே, ஐடிசி, டெக் மஹிந்திரா, டைட்டன் உள்ளிட்டவை 0.50 முதல் 1 சதவீதம் வரை குறைந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஹிந்துஸ்தைான் யுனி லீவா், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ. 72 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.289.71 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.1,241.87 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

நிஃப்டி 49 புள்ளிகள் உயா்வு: நிஃப்டி 18,570.85-இல் தொடங்கி அதிகபட்சமாக 18,625.00 வரை மேலே சென்றது. பின்னா், 18,536.95 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 48.85 புள்ளிகள் (0.26 சதவீதம்) குறைந்து 18,609.35-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT