வணிகம்

தனி நபா் கடனளிப்பு: ரூ.5 லட்சம் கோடியைக் கடந்தது எஸ்பிஐ

6th Dec 2022 02:24 AM

ADVERTISEMENT

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வழங்கியுள்ள வீட்டுக் கடன் அல்லாத தனி நபா் கடன் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வாடிக்கையாளா்களுக்கு வங்கி வழங்கியுள்ள, வீட்டுக் கடன் அல்லாத பிற வகை தனி நபா் கடன்களின் மதிப்பு 5 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

இதில் கடைசி ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் ஒதுக்கீட்டுக்கு 12 மாதங்கள் பிடித்தது. ஆனால் அதற்கு முந்தைய ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் ஒதுக்கீட்டுக்கு 15 மாதங்கள் ஆகின. அதற்கு முந்தைய ரூ.1 லட்சம் கோடிக்கு 30 மாதங்கள் ஆகின.

ADVERTISEMENT

மின்னணு வா்த்தக நடவடிக்கைகள் அதிகரித்து வருவதன் காரணமாக, கடன் வழங்கும் வேகமும் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக வங்கி வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், தனது எம்சிஎல்ஆா் வகை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் வரை உயா்த்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஓராண்டு பருவகாலம் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் 0.10 சதவீதம் உயா்த்தப்பட்டு 8.05 சதவீதமாகிறது. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபா் கடன்கள் ஆகியவை பெரும்பாலும் இந்த வகையில்தான் அளிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT