வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை உயா்வு

DIN

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டி.வி.எஸ் மோட்டாரின் கடந்த மாத விற்பனை 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை 2,77,123-ஆக உள்ளது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை 2,72,693-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த நவம்பரில் விற்பனை 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் 1,75,940-ஆக இருந்தது. அது, கடந்த மாதம் 9 சதவீதம் அதிகரித்து 1,91,730-ஆகியுள்ளது.

2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் 96,000 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் அதே மாதத்தில் ஏற்றுமதி 84,134-ஆக சரிந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT