வணிகம்

தமிழக விவசாயிகளுக்கு பரோடா வங்கி ரூ.134 கோடி கடன்

4th Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

பொதுத் துறை வங்கியான பரோடா வங்கி (பிஓபி) தமிழகத்தில் ரூ.134 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை வழங்கியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘பரோடா விவசாயிகள் வாரங்கள்’ என்ற பெயரில் வங்கி நடத்தி வரும் விவசாயக் கடன் திருவிழா, 5-ஆவது முறையாக தமிழகத்தின் 161 கிளைகளில் நடத்தப்பட்டது.

கடந்த மாதம் 15 முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அந்தத் திருவிழாவில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.134 கோடி மதிப்பிலான கடன் அங்கீகரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வங்கியின் பல்வேறு கடன் திட்டங்கள் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் பரோடா விவசாயிகள் வாரங்கள் நிகழ்ச்சி 15 நாள்களுக்கு நடத்தப்படுகிறது.

பரோடா வங்கிக்கு உள்ள 314 கிளைகளில் 161 கிளைகள் தமிழக கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. கடந்த செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதி நிலவரப்படி, விவசாயிகளுக்கு வங்கி ரூ.7,800 கோடி கடன் வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT