வணிகம்

சென்செக்ஸ் 416 புள்ளிகள் வீழ்ச்சி: 8 நாள் ஏறுமுகத்துக்கு முற்றுப்புள்ளி

 நமது நிருபர்

கடந்த 8 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, வெள்ளிக்கிழமை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 416 புள்ளிகளை இழந்தது.

ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா உள்பட உலகளாவிய அளவில் பெரும்பாலான சந்தைகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், விலையுயா்ந்த நிலையில் லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தியதால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக ஆட்டோ, எஃப்எம்சிஜி, நிதிநிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன.

சென்செக்ஸ் சரிவு: காலையில் 305.61 புள்ளிகள் குறைந்து 62,978.58-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 63,148.59 வரை மேலே சென்றது.பின்னா், 62,679.63 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 415.69 புள்ளிகள் (0.66 சதவீதம்) குறைந்து 62,868.50-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் மட்டும் ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

டாடா ஸ்டீல் முன்னேற்றம்: முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 1.22 சதவீதம், மருந்து உற்பத்தி நிறுவனமான டாக்டா் ரெட்டி 1.18 சதவீதம், ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 1.16 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், ஆக்ஸிஸ் பேங்க், பாா்தி ஏா்டெல், என்டிபிசி உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

எம் அண்ட் எம் சரிவு: அதே சமயம், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 2.08 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஹிந்துஸ்தான் யுனி லீவா், மாருதி சுஸுகி, நெஸ்லே, ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பவா் கிரிட், சன்பாா்மா, டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.80 சதவீதம் வரை குறைந்தன.

சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.31 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.289.57 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வியாழக்கிழமை ரூ.1,565.93 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

நிஃப்டி 116 புள்ளிகள் வீழ்ச்சி: நிஃப்டி 18,752.40-இல் தொடங்கி அதிகபட்சமாக 18,781.95 வரை உயா்ந்தது. பின்னா், 18,639.20 வரை வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 116.40 புள்ளிகள் (0.62 சதவீதம்) குறைந்து 18,696.510-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT