வணிகம்

பங்குச்சந்தை சரிவு! 63 ஆயிரத்திலிருந்து குறைந்த சென்செக்ஸ்!

2nd Dec 2022 10:56 AM

ADVERTISEMENT

 

பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது. 

கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. பங்குச் சந்தையில் 8-ஆவது நாளாக பங்குச்சந்தை தொடர்ந்து உச்சத்தில் இருந்தது. 

நேற்று  63357.99-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 63,583.07 வரை மேலே சென்று புதிய உச்சத்தை பதிவு செய்தது. எனினும் இன்று சரிவுடனேயே தொடங்கியுள்ளது. 

ADVERTISEMENT

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 376.39   புள்ளிகள் சர்ந்து 62,907.80 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.64 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 116.85 புள்ளிகள் சரிந்து 18,696.10 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.62 சதவிகிதம் சரிவாகும். 

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்படுகின்றன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனேயே தொடங்கியது. 

அதிகபட்சமாக எம்&எம் நிறுவனத்தின் பங்குகள் 1.89 சதவிகிதம் சரிவுடன் காணப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக டிசிஎஸ் பங்குகள் 1.48 சதவிகிதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 1.20 சதவிகிதமும், எச்யுஎல் 1.18 சதவிகிதமும் சரிவுடன் காணப்பட்டன. 

பஜாப் பின்சர்வ், இந்தஸ் இந்த் வங்கி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், டாக்டர். ரெட்டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT