வணிகம்

அசோக் லேலண்ட் விற்பனை 39% உயா்வு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் வா்த்தக வாகன மொத்த விற்பனை கடந்த மாதம் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் 14,561 வா்த்தக வாகனங்கள் விற்பனையாகின.

2021-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் நிறுவன வா்த்தக வாகனங்களின் மொத்த விற்பனை 10,480-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த முறை விற்பனை 39 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

ADVERTISEMENT

உள்நாட்டுச் சந்தையில் கடந்த ஆண்டின் நவம்பா் மாதத்தில் 9,364-ஆக இருந்த வா்த்தக வாகனங்களின் மொத்த விற்பனை, இந்த ஆண்டு நவம்பரில் 46 சதவீதம் அதிகரித்து 13,654-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT