வணிகம்

சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைக் கடந்து சாதனை!

DIN

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 4 மாதங்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

நேற்று(செவ்வாய்க்கிழமை) 59,842.21 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(புதன்கிழமை) 59,938.05 என்ற புள்ளிகளுடன் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10.48 மணிக்கு 60,149 என்ற புள்ளிகளை எட்டியது. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அதாவது, 4 மாதங்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

காலை 11.40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 328.98 புள்ளிகள் உயர்ந்து 60,171.19 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 93.75 புள்ளிகள் அதிகரித்து 17,919 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT