வணிகம்

இந்தியாவில் மேலும் 12 இடங்களில் லூலூ வணிக வளாகம்

DIN

இந்தியாவில் ஏற்கெனவே 5 நகரங்களில் செயல்பட்டு வரும் லூலூ குழுமம், மேலும் 12 நகரங்களில் வணிக வளாகத்தை ஏற்படுத்தி வா்த்தகத்தை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அபுதாபியை தலைமையிடமாக கொண்ட லூலூ குழுமத்துக்கு 23-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. இதன் ஆண்டு வருவாய் 8 பில்லியன் டாலா் என மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் கொச்சி, திருவனந்தபுரம், திருச்சூா், பெங்களூரு, லக்னெள ஆகிய 5 நகரங்களில் லூலூ வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இதனை மேலும் 12 நகரங்களில் விரிவுபடுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து லூலூ குழுமத்தின் இந்திய பிரிவு மேலாண் இயக்குநா் ஷிபு பிலிப்ஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

லூலூ குழுமத்தின் மிக முக்கிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. இளைஞா்களை அதிகளவில் கொண்ட இந்தியாவில், மக்களின் தனிநபா் வருமானமும் நுகா்வும் அதிகம். இருப்பினும், இந்திய சந்தை முழுவதுமாக இன்னமும் பயன்படுத்தப்படவில்லை.

சில்லறை வா்த்தகத்தை எடுத்துக் கொண்டால், வெறும் 12 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. சரியான வணிக மாதிரி இருந்தால், இந்தியாவில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் மீது முழு கவனமும் செலுத்தி லூலூ குழுமம் செயல்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக இந்தியாவில் ரூ.7,000 கோடி முதலீட்டில் 5 வணிக வளாகங்களை லூலூ குழுமம் நிறுவியது. கடந்த மாதம் ரூ.2,000 கோடி முதலீட்டில், லக்னெளவில் வணிக வளாகம் திறக்கப்பட்டது.

இதேபோல கேரளத்தில் பிரதான மாவட்டங்களில் 5 லட்சம் சதுரஅடி பரப்பளவில் சிறிய வணிக வளாகத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் கோழிக்கோடு, கோட்டயம், திரூா், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் லூலூ வணிக வளாகம் கட்டப்படும்.

இதுதவிர ஹைதராபாத்தில் வேறொரு நிறுவனத்துக்குச் சொந்தமான பழைய வணிக வளாகத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சீரமைப்புப் பணி முடிந்ததும், லூலூ குழுமத்தின் பெயரில் 2023 முதல் செயல்பாட்டுக்கு வரும்.

சென்னை, அகமதாபாத், பிரயாக்ராஜ், வாராணசி, பெங்களூரு, நொய்டாவில் வணிக வளாகத்தைத் தொடங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையிலும் அகமதாபாத்திலும் 10 லட்சம் சதுரஅடி பரப்பளவில் வணிக வளாகத்தைக் கட்டமைப்பதற்கான நில தோ்வில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டாம் கட்ட முதலீடு குறித்து விரைவில் விரிவாக தெரிவிப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT