வணிகம்

3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு.. பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்

16th Aug 2022 11:02 AM

ADVERTISEMENT

 

வார இறுதி விடுமுறை மற்றும் சுதந்திர நாள் விடுமுறைக்கு பிறகு இன்று பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிஃப்டி 50 புள்ளிகளும் உயர்வுடன் தொடங்கின. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 394.28 புள்ளிகள் உயர்ந்து 59,900.33 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.75 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 121.70 புள்ளிகள் உயர்ந்து 17,819.85 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.74 சதவிகிதம் உயர்வாகும். 

ADVERTISEMENT

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 26 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக மாருதி சுசூகி 2.55 சதவிகிதமும், ஏசியன் பெயின்ட்ஸ் 2.11 சதவிகிதமும், எம்&எம் 1.69 சதவிகிதமும், எச்யுஎல் 1.66 சதவிகிதமும், எச்டிஎஃப்சி வங்கி 1.42 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

இதேபோன்று டாடா ஸ்டீல், எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், என்டிபிசி ஆகிய நான்கு நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT