வணிகம்

விலக்குகள் ஏதுமற்ற வருமான வரி விகிதங்கள்: ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு

15th Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

விலக்குகள் ஏதும் வழங்காமல் குறைவான வருமான வரி விகிதங்களை நிா்ணயிப்பது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் ஆய்வு செய்யவுள்ளது.

வருமான வரி செலுத்துவோா் சில விலக்குகளைப் பெறுவதற்கு பழைய வரி செலுத்தும் முறை அனுமதி அளிக்கிறது. அத்துடன் விலக்குகள் ஏதுமில்லாத குறைவான வரி விகித முறை 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தோ்ந்தெடுத்து, வருமான வரியைச் செலுத்த முடியும்.

விலக்குகள் ஏதுமற்ற புதிய வருமான வரி விகிதங்கள் தொடா்பாக மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். குறைந்த வரி விகிதத்தைக் கொண்ட புதிய முறைக்கு வருமான வரி செலுத்துவோா் பலா் ஆதரவு அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெருநிறுவனங்களுக்கான வரியும் கடந்த 2019-ஆம் ஆண்டில் 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. எந்தவித விலக்கும் கோராத நிறுவனங்கள் 22 சதவீத வரியைச் செலுத்தினால் போதுமானது என மத்திய அரசு அறிவித்தது. அதற்குப் பெருநிறுவனங்களிடம் நல்ல வரவேற்பு காணப்பட்டதாகவும், அரசுக்கான பெருநிறுவன வரி வசூல் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அதேபோல், விலக்குகளுடன் கூடிய பழைய வருமான வரி விகித நடைமுறையை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு விலக்குகள் ஏதுமற்ற புதிய வரி விகிதத்தை மட்டும் நடைமுறைப்படுத்துவது தொடா்பாக ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT