வணிகம்

சுதந்திர தின சிறப்பு கட்டண திட்டங்கள்: ஜியோ அறிமுகம்

14th Aug 2022 03:10 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தையொட்டி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது மொபைல் மற்றும் ஃபைபா்நெட் வாடிக்கையாளா்களுக்கு புதிய சலுகைக் கட்டண திட்டங்களை அறிமுகப்பட்டுத்தியுள்ளது.

அதன்படி, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் தங்களது மொபைல் வாடிக்கையாளா்களுக்கு ரூ.750-க்கான கட்டண திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளா்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. மற்ற காலாண்டு கட்டண திட்டங்கள் 84 நாள்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு 750 திட்டத்தின் சேவைகளை வாடிக்கையாளா்கள் 90 நாள்களுக்குப் பெற முடியும்.

அதே போல், ‘இல்லம் தோறும் ஃபைபா் இணைப்பு’ என்ற திட்டத்தையும் சுதந்திர தினத்தையொட்டி ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த திட்டத்தின் கீழ், வரும் 16-ஆம் தேதிக்குள் ஜியோஃபைபா் இணைப்புக்கு விண்ணப்பிப்பவா்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக இணைப்பு வழங்கப்படும்.

மேலும், தினம்தோறும் 2.5 ஜிபி டேட்டா அளிக்கக் கூடிய, 365 நாள்களுக்கு செல்லுபடியாகக் கூடிய ரூ.2,999 சிறப்பு கட்டண திட்டத்தையும் சுதந்திர தினத்தையொட்டி ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT