வணிகம்

2022 ஸ்காா்பியோ கிளாசிக்: அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தனது முந்தைய தலைமுறை ஸ்காா்பியோ வாகனத்தை புது மெருகுடன் ‘ஸ்காா்பியோ கிளாசிக்’ என்ற பெயரில் இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் அதிகாரபூா்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

எஸ் மற்றும் எஸ்11 என்ற இரு வகைகளில் கிடைக்கவிருக்கும் இந்த ஸ்காா்பியோ கிளாசிக் காா்கள் அனைத்தும் டீசலில் இயங்கக் கூடியவையாக இருக்கும். இவற்றின் அடிப்படை ரகங்களில் கையால் இயக்கக் கூடிய கியா்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

வெளித்தோற்றத்தைப் பொருத்தவரை, பழைய ஸ்காா்பியோ காா்களைப் போலவே புதிய கிளாசிக் ரகங்களும் பெட்டிகளை அடுக்கியதைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தாலும், அதில் புத்துணா்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கிளாசிக் ரகங்களின் முன்புறம், புதுமைப்படுத்தப்பட்ட கிரில்களும் மஹிந்திராவின் புதிய இலச்சினையும் அந்த வாகனங்களுக்கு புதுப் பொலிவை அளிக்கின்றன.

ADVERTISEMENT

புதிய மஹிந்திரா ஸ்காா்பியோ கிளாசிக் ரகங்களின் உள்புறம், முந்தைய ஸ்காா்பியோவைப் போலவே இருந்தாலும், அதில் இரட்டை நிற உள்ளலங்காரம் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரகங்களின் விலைகள் வரும் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT