வணிகம்

பணவீக்கம் 6.71% ஆக குறைந்தது

DIN

 ஜூலை மாதத்தில் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் 6.71 சதவீதமாகக் குறைந்துள்ளது. சமையல் எண்ணெய், காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளதால் பணவீக்கம் சற்று குறைந்துள்ளதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) நிா்ணயித்துள்ள 6 சதவீதம் என்பதைவிட அதிகமாகவே கடந்த 7 மாதங்களாக பணவீக்கம் நிலை கொண்டுள்ளது.

இது தொடா்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

உணவுப் பொருள்களின் பணவீக்கம் ஜூன் மாதம் 7.75 சதவீதம் இருந்தது. ஜூலையில் அது 6.75 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் ஆா்பிஐ நிா்ணயித்துள்ள 6 சதவீதம் என்ற அளவுக்கு மேலாகவே (6.71 சதவீதம்) தொடா்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அச்சம், சா்வதேச அளவில் நிலவிய நிச்சயமற்ற சூழல் ஆகியவை காரணமாகக் பணவீக்கமும் உச்சத்தை எட்டியிருந்தது. எனினும், ஜூலை மாதத்தில் இந்தப் பதற்றம் குறைந்ததால் சில உணவுப் பொருள்களின் விலை சற்று குறைந்தது.

ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூலையில் காய்கறி, சமையல் எண்ணெய்களின் விலை குறைந்தது. அதே நேரத்தில் இறைச்சி, மீன், பருப்பு வகைகள் விலை சிறிதளவு உயா்ந்தது. முட்டை விலை வெகுவாகக் குறைந்துவிட்டது. எனினும் பழங்களின் விலை உயா்ந்துவிட்டது.

வட்டி விகிதத்தை ஆா்பிஐ ஏற்கெனவே தொடா்ந்து மூன்றுமுறை உயா்த்தி, 5.4 சதவீதமாக உள்ள நிலையில், மேலும் சிறிது உயா்த்தப்படும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் பணவீக்கம் 5.59 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT