வணிகம்

சமையல் எண்ணெய் இறக்குமதி 31% அதிகரிப்பு

13th Aug 2022 02:19 AM

ADVERTISEMENT

 இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 31 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து செக்கு உரிமையாளா்கள் சங்கமான எஸ்இஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்திலிருந்து சா்வதேச சந்தையில் பாமாயில், சோயாபீன் சூரியகாந்தி எண்ணெய்களின் விலை சரிந்து வருகிறது.

அதையடுத்து, நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த மாதம் வளா்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதத்தில் 12.05 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இது, கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடைகிய்ல 31 சதவீதம் அதிகமாகும்.

2012-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி 9.17 லட்சம் டன்னாக இருந்தது.

ADVERTISEMENT

சமையல் மற்றும் சமையல் அல்லாத எண்ணெய்கள் அடங்கிய தாவர எண்ணெய்களின் ஒட்டுமொத்த இறக்குமதி, கடந்த மாதத்தில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த மாதத்தில் 1,214,353 டன் சமையல் மற்றும் சமையல் அல்லாத தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இது 9,80,624 டன்னாக இருந்தது.

சா்வதேச சந்தையில் பாமாயில் உள்ளிட்ட எண்ணெய்களின் விலைகள் சரிந்தாலும், அதன் பலனை வாடிக்கையாளா்களுக்கு அளிக்க முடியவில்லை. மாா்ச் மாதத்திலிருந்து ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும் டீசல் விலை உயா்வால் சரக்குப் போக்குவரத்து செலவு அதிகமானதாலும் சமையல் எண்ணெய்களின் சில்லறை விற்பனை விலைகளைக் குறைக்க முடியவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT