வணிகம்

ரிசா்வ் வங்கிவங்கிகள் கடனளிப்பு 15% அதிகரிப்பு

12th Aug 2022 05:21 AM

ADVERTISEMENT

 கடந்த மாதம் 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 15 நாள்களில் வங்கிகளின் கடனளிப்பு 14.52 சதவீதம் அதிகரித்து ரூ.123.69 லட்சம் கோடியாகவும் வைப்புத் தொகை 9.14 சதவீதம் அதிகரித்து ரூ.169.72 லட்சம் கோடியாகவும் உள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2012 ஜூலை 30-இல் முடிவடைந்த 15 நாள்களில், வங்கிகளின் கடனளிப்பு ரூ.108 லட்சம் கோடியாகவும் வைப்புத் தொகை ரூ.155.49 லட்சம் கோடியாகவும் இருந்தது.

கடந்த மாதம் 15-இல் முடிவடைந்த 15 நாள்களில், கடனளிப்பு 12.89 சதவீதமும் வைப்புத் தொகை 8.35 சதவீதமும் அதிகரித்துள்ளன.

2021-22 நிதியாண்டில், வங்கிகளின் கடனளிப்பு 8.59 சதவீதமும் வைப்புத் தொகை 8.94 சதவீதமும் உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT